கொரோனா பாதிப்பு 3லட்சத்து 75 ஆயிரம் - பலியானோர் எண்ணிக்கை 14654 ஆக அதிகரிப்பு
" alt="" aria-hidden="true" />

 

ஜெனிவா:

 

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்து 884 பேர் குணமடைந்துள்ளனர். 



இத்தாலியில் உயிர்ப்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரசால் 5,476 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


 

இந்தியாவில் நேற்று வரை 396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது