பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.

பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.


சென்னை எழிலக வளாகத்தில் நமக்காக  தொலைக்காட்சி மற்றும் 
இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலை நடைபெற்றது.


 மீன்வளத் துறை  அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் 
அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணத்தை வழங்கினார்.
நமக்காக தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் 
திரு. Dr.லி.ஷாநவாஸ்கான் அவர்கள் நிகழ்ச்சினை தொடங்கி வைத்தார். லிங்க்ஸ் பார்மா உரிமையாளர் திரு.எஸ்.பிலிப்ஸ் அவர்கள் கபசுரக் குடிநீர் சூரணம் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கினார்.
இந்த நிகழ்விற்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் ஊடகம், 
பத்திரிகையாளர்கள் சொந்தங்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கபசுர குடிநீர் சூரணம் பாக்கெட்டுக்களை பெற்று சென்றனர். இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க தேசிய குழு உறுப்பினர் பாஷா அவர்கள் இலவச முக கவசம்  இலவசமாக வழங்கினார். அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.விமலேஷ்வரன் ஏழ்மையில் உள்ள சில பத்திரிகையாளர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />